Blogs

Friday, 15 November 2019 02:02 PM

பெரும்பாலான மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் மழையும் பெய்து வருகிறது. இதனால் வரப்பில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி விதைகளை விதைத்து முதன்மை பயிரான நெல்லை பாதுகாக்க இயலும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். வயல்களில் தோன்றும் பூச்சி, களை போன்றவற்றை  ஓருங்கிணைந்த முறையில் களைவதற்கு ஓர் அங்கமாக இருப்பது வரப்பு பயிர் சாகுபடி ஆகும். பொதுவாக ஓருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் வரப்பு பயிராக பயறு வகைகளான உளுந்து, துவரை மற்றும் காய்கறிகளான வெண்டை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை தரக்கூடிய சூரியகாந்தி, சென்டிப்பூ பயிர்களை பயிர் சாகுபடி செய்வதன் மூலம் நெல்லை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து அவற்றை  கட்டுக்குள் வைக்க உதவும்.  மேலும் விவசாயிகள் வரப்பில் இவற்றை வளர்ப்பதன் மூலம் கணிசமான வருமானம் பெற முடியும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)