Blogs

Thursday, 23 April 2020 05:22 PM , by: Anitha Jegadeesan

தோட்டக்கலை துறையின் சார்பில் குறைந்த விலையில் காய்கறி நாற்றுக்களை விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுதும் உள்ள 80 தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணைகளில், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது.

கரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் காய்கறி அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே புதிதாக காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்வதன் மூலம், எதிர்கால தேவையை சமாளிக்க இயலும்.

தோட்டக்கலை துறை பண்ணைகளில் புதிய காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசு ரூ.10 கோடியை, வேளாண் துறை செயலர் மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆகியோரிடம் அளித்துள்ளது. மாவட்டம் தோறும் உள்ள தோட்டக்கலை துறை பண்ணைகளில் 23 கோடி காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அரசின் நிதியை பயன்படுத்தி, தினமும் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி, வெங்காயம், கத்தரி, மிளகாய், வெண்டை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஒரு நாற்று, ரூ.1க்கு, என்று விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)