Blogs

Monday, 12 July 2021 10:00 PM , by: Elavarse Sivakumar

கொரோனா நெருக்கடியால், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். ஆனால், செல்போன் சிக்னல் கிடைக்காததால் குடிநீர் தொட்டி மீது அமர்ந்து பாடத்தைக் கவனிக்கும் கொடுமை நேர்ந்துள்ளது.

பள்ளிகள் இயங்கவில்லை (Schools are not running)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டப் பள்ளிகள் இதுவரைத் திறக்கப்படவில்லை.

தேர்வின்றித் தேர்ச்சி (Pass without selection)

சுமார் ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் மூடுப்பட்டு, மாணவர்கள் தேர்வின்றிச் தேர்ச்சி அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டணம் வசூலிக்க ஏதுவாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தின தனியார் பள்ளிகள். இதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைப் படிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.

டவர் பிரச்னை (Tower problem)

இருப்பினும், கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இணையதள சிக்கல் காரணமாக, பாடங்களைக் கவனிக்க முடியாத சூழல் உருவானது. இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

7 கிராமங்கள் (7 villages)

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்காவரம் ஊராட்சியில், மட்டம்பள்ளி, அக்ரஹாரம், காளிங்காவரம், கொடிதிம்மனப்பள்ளி ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் (Online classes)

கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி, மாணவர்கள் வீடுகளிலேயே இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

சிக்னல் இல்லை (No signal)

காளிங்காவரம் ஊராட்சியில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்களும் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

அடக் கொடுமையே

இதனால் அவர்கள் கைகளில் செல்போன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைப்பகுதிக்கும், அங்குள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளின் மீதும் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். மாணவிகள் அந்த பகுதிகளில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-

இந்த கிராமத்தில் சரியான முறையில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை.

கவனம் குறைந்துவிட்டது (The focus has diminished)

மேலும் ஆன்லைன் தேர்வுகளில் அவர்களால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்குப் படிப்பில் கவனம் குறைந்துவிட்டது. இந்த பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிக்னலைத் தேடி (Search for the signal)

அவசர தேவைக்காக செல்போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை (Request)

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)