அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில், மரணிக்கும் தருணத்திலும், தனது மகளைக் கட்டியணைத்துத் தந்தை காப்பாய்றியதால், 11 வயது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாய்களுக்குச் சிகிச்சை (Treatment for dogs)
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பீவர் தீவை சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். அவர்களுடன் மைக் பெர்டியூ என்பவரும், அவரது 11 வயது மகள் லேனி பெர்டியூவும் விமானத்தில் பயணித்தனர்.
விமான விபத்து (Plane crash)
இந்த விமானம் பீவர் தீவில் உள்ள வோல்கே விமான நிலையத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் அந்த தம்பதி, அவர்களுடன் பயணம் செய்த மைக் பெர்டியூ மற்றும் விமானி என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செல்லப்பிராணிகளான 2 நாய்களும் இந்த விபத்தில் இறந்தன. அதே வேளையில் மைக் பெர்டியூவின் 11 வயது மகள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினாள்.அவள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். விமான விபத்துக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரைக் காப்பாற்றியத் தந்தை
அந்த சிறுமி உயிர்பிழைத்ததற்கு தன் தந்தையேக் காரணம் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். விபத்து நிகழ்ந்த போது, கடைசியாக தனது தந்தை தன்னை அணைத்துக் கொண்டு காயமடையாமல் காப்பாற்றினார் என்று லேனி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் லேனி பெட்ரியூ தற்போது நலமாக இருப்பதாகவும், இருப்பினும் பூரண குணமடைய இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் கடமை (The duty of the father)
மரணப்படுக்கையானாலும் சரி, அந்த சூழநிலையிலும் தன் மகளைக் காப்பாற்றவே எந்த ஒருத் தந்தையும் ஆசைப்படுவார். அதுதான் அவர்து கடைமையும்கூட். அதையே இந்த சிறுமியின் தந்தையும் செய்திருக்கிறார். இந்த தந்தையின் தியாகம் தன் காலம் உள்ளவரையும் சிறுமியின் நெஞ்சில் நிலைத்துநிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க...
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!