பெண் பயணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் IRCTCயில் புதிய வசதி வந்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பாக பயணிக்க முடியும் என நம்பும் பெண்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டுள்ளது.
வெளியூர் பயணம் என்று எண்ணும்போதே, பாதுகாப்பான பயணம் என்பதில்தான் நம்முடைய நோக்கம் இருக்கும். இதற்கு எப்போதுமே பொருந்தும் பயணம் என்றால் அது ரயில்பயணம்தான். குறிப்பாக பெண்கள் எந்தக் கவலையும் இல்லாமல் எளிமையாகப் பயணிக்கலாம்.
பொதுவாகவே பேருந்து, விமானப் பயணங்களை விட ரயில் பயணங்களை நிறையப் பேர் விரும்புகின்றனர். ஏனெனில், டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பு வசதிகள், சௌகரியமான பயணம் என ரயில் பயணத்தை விரும்புவோர் ஏராளம். ரயில் பயணம் செய்பவர்கள் IRCTC ஆப் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் அதிகமாக டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம்.
பெண்களுக்கு
இந்தியாவில் பெண்களுக்கு பல இடங்களில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரயில்களிலும் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. . இதுதொடர்பான முக்கியமான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இனி பெண் பயணிகள் யாரும் ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று பயப்படத் தேவையில்லை.
தனி இருக்கைகள்
பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு தனி இருக்கைகள் இருப்பது போலவே, ரயில்களிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கான சிறப்பு பெர்த்கள் (Berth) ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, பெண்களின் பாதுகாப்புக்கான மற்றொரு திட்டமும் தயாராகியுள்ளது.
6 பெர்த்கள்
நீண்ட தூர ரயில்களில் பெண்கள் வசதியாக பயணிக்க, இந்திய ரயில்வே துறை ரிசர்வ் பெர்த் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தொலைதூர விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் ஆறு பெர்த்கள் ஒதுக்கப்படுகிறது.
அதேபோல, ராஜ்தானி, துரந்தோ உள்ளிட்ட முழு ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூன்றாவது ஏசி பெட்டியில் பெண் பயணிகளுக்காக ஆறு பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்லீப்பர் கோச்சிலும் ஆறு முதல் ஏழு கீழ் பெர்த்கள் ஒதுக்கப்படும்.
சிறப்பு பெர்த்கள்
45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறப்பு பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயிலில் உள்ள பெட்டிகளுக்கு ஏற்ப பெண்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...