இந்தியாவில் தற்போது 28 கோடிப் பேர் எல்பிஜி (LPG) சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். அதில் கிட்டத்தட்ட 14 கோடிப் பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சிலிண்டரைப் பயன்படுத்துகின்றனர். சிலிண்டரை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப், SMS / IVRS, வாட்ஸ் அப், வலைதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புக் செய்து வருகின்றனர். அவ்வாறு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கேஸ் ஏஜன்ஸி வாயிலாக சிலிண்டர் டெலிவரி (Delivery) செய்யப்படுகிறது.
30 நிமிடத்தில் சிலிண்டர்
சிலிண்டர் டெலிவரி ஆகும் வரையில், சிலிண்டருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சமையல் சிலிண்டரை அதி விரைவாக டெலிவரி செய்யும் வசதியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (Indian Oil Corporation) நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் புக்கிங் செய்த 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
தட்கல் எல்பிஜி சேவா
’தட்கல் எல்பிஜி சேவா’ மூலம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தட்கல் முறையில் சிலிண்டர் டெலிவரி திட்டம் (Cylinder Delivery Scheme) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 3 கோடி குடும்பங்கள் எரிவாயு சிலிண்டர்களை நம்பி உள்ள நிலையில், இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இரயில்வேவுடன் பிஸ்னஸ் செய்ய ஆசையா?அருமையான வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!