தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ (SN Lakshmi Sai Sri) என்ற சிறுமி 46 வகையான உணவு வகைகளை வெறும் 58 நிமிடங்களில் தயார் செய்து UNICO உலக சாதனை புத்தகத்தில் (UNICO Book Of World Records) இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய லட்சுமி சாய் ஸ்ரீ, எனக்கு சமையலில் அதிக ஆர்வம் உள்ளது, தாயிடமிருந்து சமையல் கலையைக் கற்றுக் கொண்டேன். இந்த சாதனையை நான் அடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லட்சுமியின் தாயார், ஊரடங்கு காலத்தில் எனது மகள் நன்றாக சமைக்கத் தொடங்கினாள். நான் தமிழ்நாட்டின் வெவ்வேறு பாரம்பரிய உணவு வகைகளைச் சமைக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் என் மகள் என்னுடன் சமயலறையில் நேரத்தை செலவழித்தார்.என் கணவருடன் மகளின் சமையல் ஆர்வத்தைப் பற்றி பேசினேன், அவர் உலக சாதனை முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!
இதையடுத்து, நாங்கள் இதுகுறித்து முடிவெடுத்து இந்த சாதனை செய்வதற்கான வழியை ஆயத்தப்படுத்தினோம். லட்சுமியின் தந்தை இதுகுறித்து கூறுகையில், கேரளாவைச் சேர்ந்த சான்வி என்ற 10 வயது சிறுமி சுமார் 30 உணவுகளைச் சமைத்து சாதனை படைத்தார்.
இதனால் தனது மகள் சான்வியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என என் கணவர் விரும்பினார் என லட்சுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு! தொழில் முனைவோருக்கும் ஆலோசனை!