அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரிதமாக எடுக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளனர். எனவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
நீங்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியா? கிராம உதவியாளராகலாம் உங்களுக்கான வாய்ப்பு!!
வெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம்! இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா?
விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!