பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் விவசாயிகளும், வியாபாரிகளும் தயாராகி வருகின்றனர். கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வியாபாரிகள் கரும்புகளுக்கு விலை பேசி முன் பணம் கொடுத்து வியாபாரத்தை உறுதி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பெய்த பருவ மழையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி அமோகமாக செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக கரும்பின் சாகுபடி காலம் பத்து மாதங்களாகும். மேலும் நீர்ப்பாசனம் முறையாக இருந்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியது ஆகும். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கரும்பை வெட்டி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பார்கள். இதற்காக வியாபாரிகள் கரும்பு வாங்க இப்பொழுதே விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து வருகின்றனர். கரும்பு நல்ல விளைச்சல் அடைந்திருப்பதால் தகுந்த விலை கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.