கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ரூ 100 முதல் ரூ 150 வரை விற்பனையாகிறது. விதை வெங்காயமும் அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
நிகழ்காலங்களில் வெங்காய தட்டுப்படை சமாளிக்கவும், நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யவும், தமிழகத்தில் பெரிய வெங்காயம் பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் 550 கிலோ விதைகளை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தில் மட்டும் 135 ஏக்கரில் பயிரிட 550 கிலோ பெரிய வெங்காயம் விதை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காயம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி, விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.