தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் வார இறுதி நாட்களில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.
பயிற்சியில் கறவை மாடுகள் வளர்ப்பு, புதிய தொழில் நுட்பங்கள், கொட்டகை மேலாண்மை, தீவன மேலாண்மை, நோய் மற்றும் தடுக்கும் முறைகள், வியாபார உத்திகள், வங்கிக்கடன் உதவி போன்ற அனைத்து விவரங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இலவச பயிற்சி முகாமானது மதுரை - தேனி ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் சார்பில், அங்குள்ள உழவர் பயிற்சி கூடத்தில் வைத்து நடை பெற உள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்போர், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
வரும் 9, 10 (நாளை, மறுநாள்) இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளதால், கலந்துக் கொள்ள விரும்புவார்கள் 94431 08832 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய போராசிரியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.