Blogs

Thursday, 28 November 2019 10:32 AM , by: Anitha Jegadeesan

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் (28, 29) நடைபெறும் இலவச பயிற்சி முகாமில்  விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டுபயன் பெறும் பெறுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

பயிற்சியின் சிறப்பமசமாக மாடு இனங்கள், கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, மாடுகளுக்கு வரும் நோய் மற்றும் தடுக்கும் முறைகள், மூலிகை சிகிச்சைகள், விற்பனை உத்திகள்,வங்கிக்கடன் உதவி போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மதுரை - தேனி ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையத்தில் வைத்து நடை பெற உள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்போர், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள 94431 08832 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய போராசிரியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)