பருவமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பெருமளவில் பாதித்தது. சிறிய வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் மழையின் காரணமாக விளைச்சல் குறைந்தது. இதனால் வெங்காயம் விலை மிகவும் உயர்ந்து பயன்படுத்த முடியாத நிலைமை இருந்தது. தமிழக அரசு மற்றும் உணவுத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மலிவு விலையில் விற்பனை செய்வது குறித்து விவாதிக்கப் பட்டது.
வெளிச்சந்தைகளில் விலை உயர்வாக இருந்தாலும், நுகர்வோர் நலனுக்காக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் இக்கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளின் மூலம் சிறிய வெங்காயம் கிலோ ரூ.30 - ரூ.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெங்காயம் விலை உயர்வு, கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Anitha Jegadeesan
Krishi Jagran