தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரம் பகுதிகளில் விதைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. எனவே பின்பட்ட தாளடி மற்றும் முன்பட்ட அறுவடைக்கு ஏற்ற குறுகியகால சான்று விதை நெல் விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருக்கருக்காவூர், மெலட்டூர் உள்ளிட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய கோ.ஆர் 51 ரக விதை நெல் இருப்பு உள்ளது. அப்பகுதி விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குறுகிய கால விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நன்றி: அக்ரி டாக்டர்
Anitha Jegadeesan
Krishi Jagran