வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 August, 2022 9:23 AM IST
Taxes are discounted if you have more children!

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சீனர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஏதுவாக இந்த நடவடிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

முதலிடம்

உலக மக்கள்தொகையில் சீனாத் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதையடுத்து சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு "ஒரு குழந்தை விதி" கொண்டு வரப்பட்டது. இதனால், பெற்றோர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

3 குழந்தைகள்

எனினும் சில ஆண்டுளுக்குப்பிறகு, பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப் பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்று கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பிறப்பு விகிதம் சரிவு


ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. கடந்த ஆண்டு சீனாவில் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 குழந்தைகளாக குறைந்துள்ளது.அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம் சிறிய குடும்பங்கள் மீது ஆர்வம் உள்ளிட்டவைகளால் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களாக உள்ளன.

சலுகைகள்

இதையடுத்து ஒன்றுக்கு மேல் அதிகக் குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழி காட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி, இனப்பெருக்கு ஆரோக்கியத்திற்கான செலவினங்களை அதிகரிக்கவும், நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மானியங்கள், வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
சில நகரங்கள், அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதற்காக, வரி வீட்டு கடன், கல்வி சலுகைகள் வழங்குகின்றன. பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் சீனாவின் மக்கள் தொகை 2025-ம் ஆண்டுக்குள் குறைய தொடங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

English Summary: Taxes are discounted if you have more children!
Published on: 18 August 2022, 09:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now