ஒரே பிரிமியம் ஓஹோவென வாழ்க்கை என்பதைப் போல, ஒரே சார்ஜில், 400 கி.மீ., பயணிக்கும் புதிய டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி., மே 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியக் கட்டாயமும், நம்மை, மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பக்கம் அழைத்துச் செல்கிறது. இந்த வாகனங்களுக்கு நாம் மாறுவதால், பல செலவுகளைத் தவிர்க்க முடியும். இதனைக் கருத்தில்கொண்டு, வாடிக்கையாளர்கள் பலரும், மின்சார வாகனங்களையே விரும்புகின்றனர்.
அப்படி சார்ஜிங் வசதியுடன் கூடிய அதிக தூரம் பயணிக்கக்கூடிய கார் வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கானத் தகவல் இதோ!
பெரிய பேட்டரி பேக், வென்டிலேட்டட் பிரன்ட் சீட்ஸ், ஏர் பியுரிபயர், குரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது இந்த கார்.
தற்போது விற்பனையில் உள்ள நெக்ஸான் எஸ்யூவி.,யில் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 312 கி.மீ., துாரம் செல்லும். டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம்.
புதிய நெக்ஸானில் 40 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற உள்ளது. இதன் மூலம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ., துாரம் செல்லும். சக்தி வாய்ந்த 6.6 கிலோவாட் 'ஏசி' சார்ஜர் கொடுக்கப்படும்.
சிறப்பு அம்சங்கள் (Special Features)
புரொஜெக்டர் ஹெட்லேம்ப், டைமண்ட் கட் அலாய் வீல், நவீன 'ஜிப்ட்ரான்' தொழில்நுட்பம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் அசிஸ்ட், சிங்கிள் பேன் சன்ரூப் சிறப்பம்சம்.
மேலும் படிக்க...
டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!