கர்நாடகாவில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் ஷூ வில் 7 அடி நீள நாகப்பாம்பு ஒளிந்து இருந்தது தெரியவந்துள்ளது. இது எப்படி அங்கு வந்து ஒளிந்து கொண்டது, எப்போது வந்தது என்பது குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த ஷூவைப் பயன்படுத்தியவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதுபற்றியும் தெரியவில்லை.
வழக்கமான நடைபயிற்சி
கர்நாடகா மாநில சிவமொக்கா நகரை யொட்டிய பொம்மனகட்டே பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம்.
ஷூவில் ஒளிந்திருந்தது
அவ்வாறு நடைபயிற்சி செல்ல, ஷூ ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடைபயிற்சி முடிந்தவுடன் விட்டு வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்ததும் ஷூவைக் கழற்ற முயன்றார். அப்போது, ஷூவில் 7 அடி நீள நாகப்பாம்பு ஒளிந்து இருந்தது தெரியதுள்ளது.
சிக்கிய பாம்பு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் கொடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த கிரண் ஷு வில் ஒளிந்திருந்த பாம்பை பிடித்து எடுத்துச் சென்றார். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
நடைபயிற்சி நாகபாம்பு துணையாகச் சென்றது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்பு என்றால் படையே நடங்கும் என்பார்கள். ஆனால் இங்கு நாகப்பாம்பு அதுவும், ஷூவில் ஒளிந்திருந்தது வியப்பின் உச்சக்கட்டம்தான்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!