விவசாயி ஒருவர், புதிதாகப் பிறந்த தனதுப்பேத்தியை வீட்டுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புறநகரில் உள்ள பலேவாடி பகுதியை சேர்ந்தவர் அஜித் பாண்டுரங் பல்வத்கர்.
விவசாயியான இவரது மகனுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அஜித் பாண்டுரங் பேத்தி பிறந்த உற்சாகத்தில் இருந்தார். குழந்தை பிறந்தவுடன் ஷெவால்வாடியில் உள்ள தாய்வழி தாத்தா-பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. தற்போது, அங்கிருந்து குழந்தையையும், தாயையும் திரும்ப வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
பேத்திக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க விரும்பிய அஜித் பாண்டுரங், ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். பின்னர், ஷெவால்வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் இருந்து பேத்தியையும், மருமகளையும் அஜித் பாண்டுரங் ஹெலிகாப்டரில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.
பெண் பிள்ளை பிறந்திருக்கிறது என்றால், சென்றுப் பார்க்கவே வெறுப்புக் காட்டும் பிற தாத்தாக்களுக்கு மத்தியில், தன் ஆசைப் பேத்திக்காக அஜித் பாண்டுரங் எடுத்த இந்த பிரம்மாண்ட முடிவு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!