மனைவியைக் கடித்த பாம்பையும் உடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற சம்பவம், சக நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. அதே சமயத்தில், இந்த வினோத சம்பவம் மற்றவர்களை வேடிக்கையில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றார்கள். ஆனால், அந்தப் பாம்பையேக் கடவுளாகக் கருதிப் பூஜை செய்து வழிபடும் பழக்கம், இன்றைக்கும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பிற்குதான் இத்தனை மரியாதை அளிக்கப்படுகிறது.
ஆனால், அதேப் பாம்பு, வீட்டிற்குள் புகுந்து, மனைவியைத் தீண்டியதால், ஆத்திரமடைந்த கணவன், பாம்பையும் மருத்துவமனைக்குக் கையோடுத் தூக்கிச் சென்றிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். நடந்தது அதுதான்.
பாட்டிலில் பாம்பு
உ.பி.யில் உள்ள அப்சல் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தன் மனைவியை பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. இதையடுத்து, அவரது கணவர் மனைவியுடன், கடித்த பாம்பையும் ஒரு பாட்டிலில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, முதல்கட்ட மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
ஏன் பாம்பை உடன் கொண்டு வந்தீர்கள் என்று மருத்துவர்கள் கணவர் ராமேந்திர யாதவிடம், கேட்டனர். அதற்கு அவர் என் மனைவியை எந்த பாம்பு கடித்தது என்று நீங்கள் கேட்டால்? அதற்காகத்தான் பாம்பை உடன் கொண்டுவந்ததாக வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
கணவர் விளக்கம்
பின்னர், தனது மனைவி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பாம்பைக் காட்டில் விடுவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாம்பு சுவாசிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் துளைகளை துளைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை -அரசு அறிவிப்பு!