Blogs

Monday, 08 August 2022 12:12 PM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், Work from home என்ற புதிய நடைமுறையை அனைத்துத் துறையினருக்கும் சாத்தியமாக்கிவிட்டது. இந்நிலையில், காயர்ஸ் (Colliers) மற்றும் ஆவ்பிஸ் (Awfis) நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி கோவிட் பாதிப்புகள் குறைந்ததால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவது அதிகரித்துள்ளது.

ஆனாலும், வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளுடன் சேர்த்து, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட சில வேலைகளையும் செய்ய முடிவதால், பெரும்பாலான ஐடி துறையினர் அலுவலகம் வர விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

25% குறைவு

இந்த ஆய்வு அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: கோவிட் மூன்றாவது அலை பிப்ரவரியில் குறையத் தொடங்கியது. இதில் இருந்தே, அலுவலகத்திற்குத் திரும்புபவர்கள் எண்ணிக்கை வேகம் பெற்றது. அதன்படி, ஜூன் 2022-க்குள் சுமார் 34% நிறுவனங்கள் 75 - 100% ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்திருந்தன. தொலைத்தொடர்பு மற்றும் கன்சல்டிங் துறையினர் தான் இது 75 முதல் 100 சதவீதத்தினர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான விகிதத்தில் 25% என்ற குறைவான அளவே உள்ளனர்.

53% பேர்

ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 6 நகரங்களில் 35 லட்சம் சதுரஅடிக்கான பிளெக்சிபிள் அலுவலக இடங்கள் லீசுக்கு விடப்பட்டுள்ளன.
2021 முழு ஆண்டுடன் ஒப்பிடும் போது இது நான்கில் 3 பங்காகும். கணக்கெடுப்பில் பங்கேற்ற 74% பேர் டிஸ்டிரிப்யூடட் ஒர்க்ஸ்பேசை ஏற்பதாக கூறியுள்ளனர். 53% பேர் வீட்டில் இருந்தும், அலுவலகத்திற்கு வந்தும் கலப்பு முறையில் வேலை செய்ய விரும்புகின்றனர்.

அதிக ஊழியர்கள்

இந்த கணக்கெடுப்பு நிறுவனங்களின் முதலாளிகள், சி.இ.ஓ.,க்கள், சி.ஓ.ஓ.,க்கள், போன்றவர்களிடம் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் நிறுவனங்களில் 500 முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)