Blogs

Sunday, 19 September 2021 08:00 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

உத்தரபிரதேசத்தில், வழக்கறிஞரிடம் இருந்து பணப்பையை அபேஸ் செய்த குரங்கு ஒன்று, அதனைச் சாலையில் வாரியிறைத்து வள்ளலாக மாறி செய்த அழிச்சாட்டியம் மற்றவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முத்திரைத்தாள் விற்பனை (Stamp sale)

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சர்மா. வழக்கறிஞரான இவர் நிலப்பதிவுக்கான முத்திரை தாள்களை வாங்கி விற்கும் தொழிலையும் கூடுதல் வருமானத்திற்காகச் செய்து வந்தார்.

பணம் பறிப்பு (Cash snatched)

இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு முத்திரை தாள்கள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். ராம்பூரில் உள்ள நிலப்பதிவு அலுவலகத்துக்கு அவர் ரூ.2 லட்சம் பணத்துடன் சென்றார்.
ரூ.2 லட்சத்தை அவர் ஒரு பையில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் அவர் அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தர். அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு ஒன்று, அவரது பணப்பையைப் பறித்து சென்றது. இதனால் வினோத்குமார் சர்மா நிலைகுலைந்து போனார்.

குரங்குச் சேட்டை (Monkey suit)

அவர் சுதாரிப்பதற்குள் அந்த குரங்கு பணப்பையுடன் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏறியது. சர்மா திகைத்தபடி, அந்தக் குரங்கையேப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பையை போட்டு விடு என்று குரங்கைப் பார்த்து கூச்சலிட்டார்.இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியதுடன், இலவச நகைச்சுவைக் காட்சியும் அரங்கேறியது.

கூட்டத்தைக் கண்டதும் குரங்கு அந்தப் பையைத் திறந்து இரண்டு 50 ஆயிரம் ரூபாய் கொண்ட நோட்டு கட்டுகளை கையில் எடுத்துக் கொண்டது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயுடன் பையை கீழே போட்டு விட்டது. இதனால் சர்மாவுக்கு பாதி உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. எஞ்சிய ஒரு லட்சம் ரூபாயையும் கீழே போட்டு விடும்படி அவர் குரங்கை பார்த்து கதறினார். ஆனால், யாரும் எதிர்பாராத சமயத்தில், அந்த குரங்கு, பணக் கட்டுகளை அவிழ்த்து ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசத் தொடங்கியது.

பண மழை (Cash rain)

குரங்கு வீசிய 500 ரூபாய் நோட்டுகளை அங்குக் கூடியவர்கள், போட்டி போட்டு எடுத்தனர். ஒரு லட்சம் ரூபாயையும் அந்த குரங்கு அள்ளி வீசியது. அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் சர்மா பொதுமக்களிடம் கதறி அழுதுக் கேட்டுக்கொண்டதால், ரூ.95 ஆயிரம் திரும்பக் கிடைத்தது. ரூ.5 ஆயிரம் மட்டும் பறிபோய் இருந்தது. எப்படியோப் பணம் கிடைத்ததே என்று ஆறுதல் அடைந்தபடி வழக்கறிஞர் சர்மா புறப்பட்டுச் சென்றார்.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)