ஒவ்வொரு கட்டமாக, ஓலா ஸ்கூட்டர் தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவேஷ் அகர்வால் சமூக வலைதளங்களில் 17 வினாடி வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.
ஓலா இ-ஸ்கூட்டருக்கான காத்திருப்பு முடிவடையவடைய உள்ளது. நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) அறிமுகம் குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளது. ஓலா ஸ்கூட்டரின் அறிமுகத்தை மறக்க முடியாததாக மாற்ற நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நிறுவனம் தீவிரமாக ஸ்கூட்டருக்கான விளம்பரத்தில் ஈடுபடுவதற்கான காரணம் இது தான்.
ஓலா மின்சார ஸ்கூட்டர்
அதில் ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது காட்டப்பட்டது. இருப்பினும், இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் கியர் இல்லை. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா நிறுவனம் இந்த ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும்.
ஓலா இ-ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் வரும்
ஓலா மின்சார ஸ்கூட்டரை 10 வண்ணங்களில் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் கருப்பு, வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் அவற்றின் சாயல் வண்ணங்கள் இருக்கும்.
நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஜூலை 15 ஆம் தேதி ரூ .499 க்குத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே நிறுவனம் 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது.
விலை என்ன?
இந்த மின்சார ஸ்கூட்டருக்கான (Electric Scooter) முன்பதிவு வெறும் 499 ரூபாயில் தொடங்கியது. ஆனால், இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை குறித்து நிறுவனம் எந்தவிதமான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஓலா இ-ஸ்கூட்டரின் மதிப்பிடப்பட்ட விலை ரூ .80,000 முதஷ் 85,000 என சமூக வலைதளங்களில் சலசலப்பு உள்ளது.
ஓலா நிறுவனம், ஸ்கூட்டரை மானிய விலையில் (Subsidy) வாங்குவதற்கான வசதியையும் அளிக்கின்றது. ஆனால், மதிப்பிடப்பட்ட இந்த விலை மானியத்துக்குப் பிறகான விலையா அல்லது இந்த விலையில் மானியம் கொடுக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை.
TVS Jupiter-ஐ தவணையில் வாங்க வாய்ப்பு!
அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
- ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 150 கிமீ வரை பயணிக்கும் என்று ஓலா இ-ஸ்கூட்டரைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
- ஓலா இ-ஸ்கூட்டரின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஹோம் சார்ஜருடன் அறிமுகம் செய்யப்படுகின்றது. அதாவது வீட்டில் உள்ள பொதுவான சாக்கெட்டிலிருந்து ஸ்கூட்டரை சார்ஜ் செய்யலாம்.
- ஓலா இ-ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.
- ஓலா இ-ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம். இது ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
- ஓலா மின்சார ஸ்கூட்டரில் ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதியும் கிடைக்கும்.
- பூட் ஸ்பேசைப் பொறுத்தவரை, இது கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. வீடியோ டீசரில் பூட் ஸ்பேசில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்க முடியும் என்பது தெளிவானது. வழக்கமாக ஸ்கூட்டரின் பூட் ஸ்பேசில் ஒரே ஒரு ஹெல்மெட்டை மட்டுமே வைக்க முடியும்.
400 சார்ஜிங் பாயிண்டுகள்
இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்ய, நிறுவனம் 400 நகரங்களில் 1,00,000 -க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைபார்சார்ஜர் மையங்களை (Charging Points) உருவாக்கும். இதனால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது. எந்த நகரத்தில் சார்ஜிங் மையங்கள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.