அண்டை நாடான பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ டீத்தூள் விலை ரூ.1,600 என்றால் நம்பமுடிகிறதா? உண்மை அதுதான்.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு பயங்கரமாக சரிந்து, விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உணவு பொருட்களில் தொடங்கி பெட்ரோல் வரை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ரூ.1,600
இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் டீ மக்கள் பிரியப்பட்டு பருகும் பிரதான பானமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் டீ தூள் விலை கிலோ 1600 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 15 நாட்களிலேயே பாகிஸ்தானில் டீ விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் துறைமுகங்களில் டீ சரக்குகள் தேங்கியுள்ளதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் துறைமுகங்களுக்கு வந்த 250 கண்டய்னர்கள் இன்னும் தேங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
உயரும் அபாயம்
இதன் விளைவாகவே இன்னும் டீ விலை உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முன்னணி டீ நிறுவனம் டீ விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் டீ விலையை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்டதால், இறக்குமதி செய்யப்பட்ட டீ சரக்குகளின் விலையை எப்படி கணக்கிடுவது என்பது கூட புரியாமல் தொழில்துறையினர் குழப்பத்தில் இருக்கின்றனர். இதனால் சரக்குகள் தேங்கி, கையிருப்பு சரிந்து, டீ விலை உயர்ந்து வருகிறது. டீ மட்டுமல்லாமல் மற்ற பொருட்களுக்கும் இதே நிலைதான்.
ரூ.2,500
துறைமுகங்களில் தேங்கி கிடக்கும் சரக்குகள் சந்தைக்குள் வரவில்லை எனில், ரமலான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டீ விலை கிலோ 2500 ரூபாயை கூட தொடக்கூடும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க…
பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!