Blogs

Friday, 11 December 2020 03:25 PM , by: Daisy Rose Mary

800 ஆண்டுகளுக்கு பின் வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றும் அரிய நிகழ்வு வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதனை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

21ம் தேதி தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய கிரகங்களானா வியாழன் (Jupiter) மற்றும் சனி  (Saturn) ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

6 பூச்சிக் கொல்லிகளுக்கு டிசம்பர் 31 முதல் தடை!!

இந்த அரிய வகை நிகழ்வானது 800 ஆண்டுகளுக்கு பின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வானில் நிகழவிருக்கிறது. அன்றைய நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். தெளிவான வானிலை இருந்தால் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை உலகில் எந்த பகுதியில் இருந்தும் கானலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1226ம் ஆண்டுக்கு பின் மீண்டும் காண வாய்ப்பு

கடைசியாக கடந்த 1226 ஆம் ஆண்டு இந்த கிரகங்களின் இணைவை பூமியிலிருந்து பார்க்க முடிந்ததாகவும், அதை தொடர்ந்து அடுத்த 400 ஆண்டுகள் கழித்து 1623ம் ஆண்டில் இவை நெருங்கி வந்த காட்சி பூமியில் தென்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் 800 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்வு மீண்டும் பூமியில் தெரியவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு வழங்கும் ஸ்கூட்டருக்கு மானிய இலக்கு குறைப்பு!

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் - Christmas Star

இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)