சிறு குழந்தைகள் விபரம் தெரியாமல் காதிலும், மூக்கிலும் சிறியக் கல் உள்ளிட்ட எதையாவது போட்டுக்கொள்வார்கள். பெற்றோர் அக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, டாக்டரிடம் சென்று சிகிச்சை அளிப்பார்கள். டாக்டரும், நேக்காகக் கொரடு வைத்து, அந்தப் பொருளை எடுத்துவிடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால், இங்கு ஒரு பெண்ணின் காதுக்குள் போனது எது தெரியுமா? அதுதான் குட்டிப் பாம்பு.
காதில் போடும் கம்மலில் பாம்பு டிசைன் இருக்கலாம். ஆனால் பாம்பேக் காதுக்குள்ளேயே பாம்பு புகுந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு திகில் அனுபவம் இந்தப் பெண்ணிற்கு கிடைத்துள்ளது.
அதிர வைக்கும் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக வைரலாகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்கள் வேடிக்கையானதாக இருந்தால், பல சமயங்களில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
காதுக்குள் பாம்பு
அப்படி ஒரு பாம்பு வீடியோ தான் அண்மையில் வைரலாகிறது. பாம்பை காட்டுக்குள் பார்த்திருக்கலாம், வீட்டுக்குள் பார்த்திருக்கலாம், பொந்துக்குள் பார்த்திருக்கலாம். ஆனால் பெண்ணின் காதுக்குள் பாம்பு இருப்பதை பார்த்ததுண்டா? பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் பாவம், ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு சென்றுவிட்டது. அதை சிறிய கொரடு கொண்டு மருத்துவர் வெளியே எடுக்கிறார்.
பாம்புக்கு காது இருக்கிறதோ இல்லையோ, ஒரு பெண்ணின் காதுக்குள் சென்று மரண பீதியை கிளப்பிவிட்டது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...