Blogs

Saturday, 20 August 2022 11:33 AM , by: Elavarse Sivakumar

தியாகத்தின் திருவுருவம், தன்னிகரில்லாத பாசத்தைக் கொட்டும் உறவு எனத் தாய்மையின் பெருமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், தன் தாயைக் காப்பாற்றுவதற்காக, 5 வயது குழந்தை, தன் உயிரைப் பறிகொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

சோகச் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கடபூர் அருகே தாயைக் காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நல்லப்பாம்பு

கடம்பூர் அருகே குப்பணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு 5 வயதில் கார்த்தி என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று தாய் அர்ச்சனா வீட்டில் சமைத்து கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் நல்லபாம்பு வந்துள்ளது.

சிறுவன் பலி

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் கார்த்தி, தாயைக் காப்பாற்றுவதற்காக விரைந்து வந்து பாம்பை விரட்டி உள்ளார். அப்போது பாம்பு சிறுவனை கடித்து உள்ளது. வலியல் துடித்த சிறுவனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பாம்பிடம் இருந்து தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5 வயது சிறுவன், பாம்புக் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)