வளர்ப்பு பிராணிகள் அல்லது செய்யப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகள் மீது அதன் எஜமானர்கள் அளவுகடந்த அன்பையும், பாசத்தையும் கொட்டுவது வழக்கம்.
அலாதி அன்பு
ஆனால் அயல்நாடுகளை ஒப்பிட்டால், அங்கு செல்லப்பிராணிகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் நடத்துவார்கள். செல்லப்பிராணிகளுக்கென உணவு, உடை , இருப்பிடம் இவை மட்டுமல்ல, அவற்றுக்கான உற்சாகத்தை அளிப்பதற்காக, விளையாட்டு, அழகு சாதனப் பொருட்கள் என பல விதங்கள் உண்டு.
குறிப்பாக மூத்த குடிமக்கள் சிலர், தங்கள் சொத்தில் ஒருபங்கை, செல்லப்பிராணிகளின் பராமரிப்புத் செல்வுக்காக ஒதுக்குவர்.
ரூ.2.லட்சம் (Rs.2 lakhs)
அந்த வகையில், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் ஒருவர் தன் செல்லநாய்க்குட்டியுடன் பயணிக்க அனைத்து பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்களையும் வாங்கி பயணித்துள்ளார். இதற்காக அவர் செலவு செய்தது எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் அசந்து போவீர்கள். ரூ.2 லட்சத்திற்கும் அதிகமானத்தொகை.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் செல்லப்பிராணிகள் மீது அவர்கள் செலுத்தும் அன்பு மாறுபட்டாலும், ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கிறது.
அந்த வகையில் இந்தப் பெண், தனது செல்ல நாய்க்குடடிக்காக விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் எனப்படும் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து முன்பதிவு செய்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அனுமதி இல்லை
பொதுவாகவே விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன், செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்குகிறது.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!