ஒரு பாட்டில் தண்ணீருக்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருப்பீர்கள்? ரூ.20 அல்லது ரூ.40. அதிகபட்சமாக ஒரு ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்கிறீர்கள் என்றால் கூட விலை சுமார் ரூ.60 இருக்கும். ஆனால், உலகின் விலை உயர்ந்த இந்த தண்ணீர் பாட்டிலும் விலையை கேட்டால் நீங்கள் அசந்து விடுவீர்கள்.
தண்ணீர் பாட்டில்
இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44,95,830 லட்சம் ஆகும். இந்த தண்ணீர் பாட்டில் கின்னஸ் சாதனை (Guinness Record) புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா? இந்த பாட்டில் 24 கேரட் தங்கத்தால் (Gold) ஆனது. பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவரால் இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலகின் எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பருகினால் அதிக உத்வேகம் கிடைக்கும் என்றும், அதிக சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இதுபோலவே ஜப்பான் நாட்டில் விற்கப்படும் ‘கோனா நிகரி’ என்ற தண்ணீர் பட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தண்ணீரை பருகினால் எடை குறையும், புத்துணர்வு கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க