குண்டும் குழியாக உள்ள சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, இளைஞர் ஒருவர் வித்தியாசமானப் போராட்டம் நடத்தினார். அவர், நடுரோட்டில் குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து, தவம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஹம்சா என்ற இளைஞர் வசித்து வருகிறார். தற்பொழுது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது. இதனால் பல விபத்துகள் நடக்கிறது. மேலும் சாலை சரி இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
சாலையில் குளியல்
இந்த அவல நிலை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைத்த ஹம்சா, சாலையில் உள்ள பள்ளத்தில் நின்று குளித்தும், துணிகளை துவைத்தும் அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
3 மாதங்களுக்கு முன்
மலப்புரம் பாண்டிக்காடு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில், கேரளாவில் உள்ள அனைத்து சாலைகளின் நிலையும் இதுதான். பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாகத் தென்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து சாலைகளிலும் தார் போடப்பட்டது. ஆனால் மீண்டும் பள்ளங்கள் உருவாகியுள்ளனன.
புது முயற்சி
இதை எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்று யோசித்த போது தான் கீழே இறங்கி குளிக்கலாமா என்ற எண்ணம் வந்தது.
இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.
மேலும் படிக்க...