ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட 3 வங்கிகளில் இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதால், இனி இந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது. எனவே வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சரிந்த பொருளாதாரம் (Collapsed economy)
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் வகையில், வகையில் பல்வேறு மாற்றங்களையும், திட்டங்களையும் வகுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
வங்கிகள் இணைப்பு (Banks link)
இதன் ஒரு பகுதியாக வங்கிகளை இணைக்க ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டு விட்டன.
இதனால் இந்த வங்கிகளுக்கான பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகள் இனிமேல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் MICR குறியீடுகள் மற்றும் IFSC குறியீடுகளை அருகில் உள்ள அவற்றின் கிளைகளில் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் உடனே அருகில் உள்ள கிளைகளில் மாற்றிக் கொள்ளுங்கள்.
எனவே இந்த 3 வங்கிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, பிற வங்கி வாடிக்கையாளர்களும், நடைமுறைச் சிக்கல்களைத் தெரிந்துகொண்டு உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
வங்கி ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுமுறை - அக்டோபரின் அடிக்குது ஜாக்பாட்!