ஆசிரியர் பணி என்பதே அறப்பணி. அந்தப் பணியைப் செய்பவர்கள், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம்.
அடிப்படைத் தேவை (Basic need)
இருப்பினும் பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் பணியின் மாண்பை உணர்ந்துகொள்வதே இல்லை என்பது சமுதாயத்தின் ஆதங்கமாகவே உள்ளது.
ஆனால், தன் பணி மாணவிகளுக்கு கற்பிப்பதோடு நின்றுவிடவில்லை.நாம் நினைத்தால், அனைத்தையும் தாண்டி அவர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இந்த ஆசிரியர்கள்.
கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடுக் கட்டிக் கொடுக்கும் பெண்கள் பள்ளி ஆசிரியைகளின் சமூக பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், தோப்பும்பாடியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள் இணைந்து இந்த உன்னதப் பணியை செய்து வருகின்றனர்.
150 வீடுகள் (150 houses)
2014ம் ஆண்டுத் தனதுத் தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டியதில் தொடங்கிய இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது வரை இந்த ஆசிரியைகள், மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
சாத்தியமானது எப்படி? (How is that possible?)
இதுபற்றி அந்த ஆசிரியை லிஸ்சி கூறுகையில், சொந்த நிலம் இருந்தும் சரியான வீடு இல்லாத தங்கள் மாணவிகளுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்காக ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டத்தைத் தொடங்கினோம்.
நல்லாசிரியர்கள்
இந்த திட்டத்தைத் தொடங்கியப் பிறகு பல குடும்பங்களுக்கு நிலம் இல்லை என்பதை அறிந்தோம். எனவே அவர்களுக்காக நிலத்தையும் தானம் செய்யுமாறு கேட்டு மக்களை அணுகினோம். ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு” என்கிறார் லிஸ்சி.
வீடு கட்டிக் கொடுக்கும் பணிக்காக நன்கொடை மூலம் நிதி சேகரிக்கின்றனர்.
இந்த ஆசிரியைகளுக்கு எத்தனை சல்யூட் அடித்தாலும் தகும். இவர்கள் அல்லவா நல்லாசிரியர்கள்!
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
ரூ.2 லட்சத்தைப் பறித்தக் குரங்கு-பணமழை பொழிந்து அழிச்சாட்டியம்!