Blogs

Tuesday, 22 February 2022 08:22 AM , by: R. Balakrishnan

This is a great choice to start a business

நீங்களும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க விரும்பினால் இந்தச் செய்தி உங்களுக்கானதுதான். அட்டைப் பெட்டித் தயாரிக்கும் தொழிலை நீங்கள் கிராமத்தில், நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் நஷ்டம் குறைவு. இதன் தேவை மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

நஷ்டம் இல்லை (No Loss)

அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில் இப்போது பிரபலமாகி வருகிறது. அட்டைப் பெட்டிகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. கடைகளிலும் வீடு மாறுவதற்கும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது. சிறிய, பெரிய என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்வதற்கு ஒரு அட்டை பெட்டி தேவை. அட்டைப்பெட்டிகளுக்கு சீசன் கிடையாது. எனவே நீங்கள் வருடத்தின் அனைத்து நாட்களிலும் இதைத் தயாரிக்கலாம்; விற்பனை செய்யலாம். அதன் தேவை ஒவ்வொரு மாதமும் இருக்கும். இந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆன்லைன் வணிகத்திலும் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

பயன்பாடு (Usage)

அட்டைப் பெட்டிகள் சீரான பேக்கிங் மற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இது புத்தகங்களை சேர்த்து வைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதன் கனமான தயாரிப்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுகிறது. இதற்கு, கிராஃப்ட் பேப்பர் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதன் சந்தை விலை கிலோ 40 ரூபாய். சிறந்த தரமான கிராஃப்ட் பேப்பர் பயன்படுத்தப்படுவதால் தரமான அட்டைப் பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன.

தேவை (Need)

இந்தத் தொழிலைத் தொடங்க, உங்களிடம் சுமார் 5000 சதுர அடி இடம் இருக்க வேண்டும். இதுதவிர இதற்கான ஆலையும் அமைக்க வேண்டும். பின்னர், பொருட்களை வைக்க ஒரு சேமிப்புக் கிடங்கு தேவைப்படும். அட்டைப்பெட்டி உற்பத்திக்கு உங்களுக்கு இரண்டு வகையான இயந்திரங்கள் தேவை.

முதலீடு (Investment)

இதை சிறு தொழிலாக நீங்கள் ஆரம்பிக்கலாம். பெரிய அளவில் கூட ஆரம்பிக்கலாம். அது முதலீட்டைப் பொறுத்தது. இந்தத் தொழிலை பெரிய அளவில் தொடங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம் முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்கள் மூலம் தொடங்கினால் ரூ.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

நல்ல லாபம் (Good Profit)

இந்தத் தொழிலில் உங்களுக்கான லாபமும் பெரிய அளவில் இருக்கும். உண்மையில், இந்த தொழிலுக்கான தேவை இப்போது அதிகமாக உள்ளது. எனவே இதில் லாபமும் அதிகமாக இருக்கும். இதை சிறந்த முறையில் செய்து நல்ல வாடிக்கையாளர்களை உருவாக்கினால், இந்த தொழிலை தொடங்கி மாதம் ரூ.10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க

என்ன கேட்டாலும் உடனே பதில் அளிக்கும் அசாத்திய திறமை வாய்ந்த குழந்தை!

இனி விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம்: ஆரம்பமானது டிக்கெட் விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)