மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2023 12:21 PM IST
Fixed Deposit

வங்கிகளில் நிலையான வைப்பு நிதி (ஃபிக்சட் டெபாசிட்) என்பது நல்ல வருமானம் தரும் பாதுகாப்பான ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது. இதில் நிறையப் பேர் முதலீடு செய்கின்றனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து குவேரா என்று ஆன்லைன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் 1.6 மில்லியன் முதலீட்டாளர்களிடம் கருத்துக் கேட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

சுமார் 44 சதவீத முதலீட்டாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் பாதுகாப்பான முதலீட்டுக்கும்தான் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல, பணவீக்க பிரச்சினையைச் சமாளிக்க அவசரப் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதாக 23 சதவீதத்தினர் இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஆய்வு செய்திருந்தது. அதில் 95 சதவீதம் குடும்பங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், எஞ்சிய 10 சதவீத குடும்பங்கள் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் கண்டறியப்பட்டது.

பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகளில் வருமானம் அதிகம் கிடைக்கும் என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் என்பதால் நிறையப் பேர் அதில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். அதற்குப் பதிலாக வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர். தற்போதைய குவேரா ஆய்வின்படி, சராசரியாக ஐந்தில் ஒருவர் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.

பல்வேறு வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.

  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - 3% முதல் 6.75%
  • ஹெச்டிஎஃப்சி பேங்க் - 3% முதல் 7%
  • ஐசிஐசிஐ பேங்க் - 3% முதல் 7%
  • ஐடிபிஐ பேங்க் - 3% முதல் 6.75%
  • கோடாக் மகிந்திரா பேங்க் - 2.75% முதல் 7%
  • ஆர்பிஎல் பேங்க் - 3.25% முதல் 7.55%
  • கரூர் வைஸ்யா பேங்க் - 4% முதல் 7.25%
  • பஞ்சாப் நேஷனல் பேங்க் - 3.50% முதல் 7..25%
  • கனரா பேங்க் - 3.25% முதல் 7%
  • ஆக்சிஸ் பேங்க் - 3.50% முதல் 7.26%
  • பேங்க் ஆஃப் பரோடா - 3% முதல் 7.05%
  • ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - 3.50% முதல் 7.50

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டியையும் வங்கிகள் மாற்றியமைக்கலாம். எனவே மேலே கூறப்பட்டுள்ள வட்டி விகிதங்களில் விரைவில் மாற்றம் இருக்கலாம்.

மேலும் படிக்க

ரெப்போ வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: பணம் எடுக்க இது கட்டாயம்!

English Summary: This is the reason why people invest in fixed deposit scheme?
Published on: 09 February 2023, 12:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now