தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பட்டமளிப்பு விழா (convocation)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இப்பல்கலைக்கழகத்தால் 31.03.2021 அன்று வரையிலானத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகளிடம் இருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று முதல் (From Today onwards)
விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnau.ac.in மூலம் இன்று(23.04.21) முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள இணைப்பு (Link)மூலம் ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect ( The Comptroller, TNAU, Coimbatore) மூலம் கணக்கில் செலுத்த வேண்டும்.
ஆவணங்கள் (Documents)
இப்பட்டமளிப்பு விழாவிற்குப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் (அதாவது தற்காலிகப் பட்டப்படிப்பு சான்றிதழின் நகல் (PC), இறுதிப் பருவ மதிப்பெண் சான்றிதழின் நகல், இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான இரசீது மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் (2 Nos)ஆகியவை இப்பல்கலைக்கழகத்திற்கு வரும் 11.06.21- ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், 0422-6611506 என்றத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
மரம் நட மறந்தால், இந்தியா விவசாயத்தை இழக்க நேரிடும்- சத்குரு அறிவுறுத்தல்!
கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்
தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!