நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2021 9:28 AM IST
Credit: IndaMART

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், 2நாள் பேக்கரி எனப்படும் அடுமனைத் தொழில்நுட்பப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் படிப்பு (Agricultural Studies)

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.

தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)

சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.

அதேநேரத்தில் தொழில்முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி மகத்தானது.

2 நாள் பயிற்சி (2 day training)

அந்த வரிசையில், வரும் 25.08.2021 மற்றும் 26.08.2021 தேதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுமனை உணவுப் பொருட் களுக்கு (Bakery Products) தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத் தக்க வகையிலும் பல சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும்.
வளர்ந்து வரும் இந்த அடுமனைத் தொழில் நுட்பங்கள் சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

பேக்கரிப் பொருட்கள் (Bakery products)

ஆகவே, இந்தப் பயிற்சியின்போது கீழ்க்காணும் அடுமனைப் பொருட்களான, ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ், கட்லெட் மற்றும் சமோசா வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிக் கட்டணம் (Training fees)

இத்தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,500/- +18% GSTசெலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புக்கு (Contact)

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோயம்புத்தூர் 641 003 என்ற முகவரியிலும், 0422 -6611268, 044 - 6611340 என்றத் தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

Business: ரூ.7 லட்சம் மாதம் வருமானம்!!! முதலீடு 3 லட்சம்!

நகைக் கடன் தள்ளுபடி,எவருக்கெல்லாம்? வெளியான முக்கிய தகவல்!

English Summary: TNAU offers opportunity-bakery training for you too as an entrepreneur!
Published on: 17 August 2021, 09:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now