நகரபுற மக்களில் இன்று பெரும்பாலானோர் தோட்டம் அமைத்தலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக குறைந்த இட வசதியில் இயன்ற வரை சிறிய தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். மாடித்தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதினாலும், அவற்றை பற்றிய போதிய விளக்கங்கள் இல்லாததினாலும் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் ஒரு நாள் பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்துள்ளது.
பயிற்சி மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்தியில், மாடித்தோட்டம் அமைத்து தொழில் முனைய விரும்புவோர்க்கு உதவும் நோக்கில் கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தின் சார்பில் மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியானது, முக்கியமாக தொழில்முனைவோர், நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக வடிவமைக்க பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி (நாளை) நடைபெறவுள்ள பயிற்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு குறிப்பேடு, கையேடு மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியின் நிறைவாக அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்க பட உள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக ரூ.650. செலுத்தி இணைந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு
எச்.கோபால்
மைய பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்,
முதல்தளம், சிப்பெட் எதிரில்,
கிண்டி, சென்னை – 600 032
044-22250511