மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2020 10:26 AM IST

கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் அடுத்த இரு தினங்களுக்கு சிறுதானிய உணவுகள் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு  நடைபெறவுள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் கலந்துக் கொள்ளலாம். பயிற்சியில் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், தொடர்ந்து பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியில் மகளிர்,  சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைய விரும்புவோர் என அனைத்துத் தரப்பினருக்கும் பங்கேற்கலாம் என கூறினார். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நடைபெறும் பயிற்சிகள்

  • சிறுதானிய உணவுகள் தயாரிப்பு - பிப்ரவரி 12
  • காளான் வளர்ப்பு - பிப்ரவரி 13

பயிற்சி கட்டணம் - ரூ.650.

பயிற்சி வகுப்பு - காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்,
முதல்தளம், சிப்பெட் எதிரில்,
கிண்டி, சென்னை 600 032
044-22250511

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Tnau organized one day workshops about cooking with millet and growing mushroom
Published on: 11 February 2020, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now