TNPSC குரூப் 2, 2ஏ' தேர்வில் விண்ணப்ப பதிவு காலம் முடிந்த நிலையில், 11லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு வேலை என்பது எல்லாக் காலத்திலும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. இருப்பினும் சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அரசு வேலைக்கான மதிப்பு இன்றுமட்டுமல்ல, காலா காலத்திற்கு உள்ள ஒன்று.
அரசு வேலையில் உள்ள மணமகனுக்கு மட்டுமேப் பெண் கொடுப்பது என்றெல்லாம் இலக்கு வைத்து செயல்படுபவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஏனெனில் இத்தகையோரில் பெரும்பாலோர் அரசு ஊழியர்களாக இருப்பர். அதேநேரத்தில், தனியார் துறையில் பெரும் ஊதியத்தில் வேலை பார்த்தாலும், அரசு வேலையின் மீது பலருக்கும் ஆர்வம் உள்ளது என்பதற்கு தற்போதையத் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களே சாட்சி.
தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2ஏ' ஆகிய பதவிகளில், 5,529 இடங்களை நிரப்ப, மே 21ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, பிப்ரவரி 23ல் தேதியுடன் முடிந்தது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 10.94 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த முறை நடந்த தேர்வை விட ஒரு மடங்கு அதிகம்.இதற்கிடையே, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஏப்ரல் 4ம் தேதி நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை அறிவியல் அலுவலர், கட்டடக் கலை உதவியாளர் பணி தேர்வுக்கு, நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, புள்ளியியல் சார்நிலை பணிக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!