தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 49 உதவி பேராசிரியர் (assistant professor) பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்கலைக்கழகம் (University)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். கடந்த 1989ம் ஆண்டு, இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனிப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.
பலக் கல்லூரிகள் (Many colleges)
சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்திற்கு சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவையே அடிப்படை.
காலியிடங்கள் (Vacancies
இங்கு தற்போது காலியாக உள்ள 49 உதவி பேராசிரியர் (assistant professor) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.
பணி (Job)
உதவிப் பேராசிரியர்
காலியிடங்கள் (Vacancies)
49
கல்வித்தகுதி (Education Qualification)
சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (Fees)
மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.100 (ஒவ்வொரு பணிக்கும்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு ரூ.500 மட்டுமே.
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)
விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் iqac@tanuvas.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முகவரி (Address)
பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600051, தமிழ்நாடு, இந்தியா என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேசி (Last Date)
30.07.2021,மாலை 5.00 வரை
அதிகாரபூர்வ வலைத்தளம் http://tanuvas.ac.in/recruitment_ap_2021.html
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf
மேலும் படிக்க...
வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்!
குறுவை சாகுபடிக்கு விதை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்