இன்றைய தேதி 22.02.2022. இந்த தேதியை இடமிருந்து, வலமிருந்து வாசித்தாலும் வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் 'பாலின்டிரோம்' தினம் என்பர். எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்பதால், இத்தேதியில் பலர் திருமணம் செய்துகொள்ள விரும்புவது வழக்கம். இது செவ்வாய் கிழமை, அதாவது ஆங்கில நாளான ‛Tuesday' அன்று வந்துள்ளதாலும், இரண்டு இரண்டாக வருவதாலும் ‛‛Twosday'' என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. இன்னும் 200 ஆண்டுகளுக்கு இதுபோல் வராது என்கின்றனர்.
பாலின்ட்ரோம் தினங்கள் (Polindrom Days)
ஜப்பானிலும் ஆஸ்திரேலியாவிலும் முதலில் இந்த நாள் பிறந்ததால், அந்நாட்டு மக்கள் இதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.
இதற்கு முன்பு 11.1.11 மற்றும் 11.11.11 அன்று எல்லாம் ஒன்று என்ற எண்ணாக வந்தபோதும் இதே போல் உலகம் முழுவதும் வித்தியாசமான தினம் என்று பகிரப்பட்டது. இந்த நாட்கள் தவிர, இந்த நுாற்றாண்டில் 02.02.02, 12.12.12 ஆகியவையும் இதுபோல் பாலின்ட்ரோமாக வந்தன.
இன்னும் 11 ஆண்டுகளில் கழித்து அதாவது, 3.3.33 (Threeday) அன்றும், அதன் பிறகு 4.4.44 (Fourday) அன்றும் பாலின்ட்ரோம் தினங்கள் வர இருக்கின்றன.
மேலும் படிக்க
புதிய ஓய்வூதிய திட்டம்: EPFO அடுத்த மாதத்தில் விவாதக் கூட்டம்!
இனி விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம்: ஆரம்பமானது டிக்கெட் விற்பனை!