காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு சென்ற விஷயத்தை, மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக, பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். பாஸ்போர்ட்டின் பக்கங்களைக் கிழிப்பது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில், சட்டத்தை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
சட்டப்படி குற்றமம்
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், சமீபத்தில் வெளிநாடு சென்று விட்டு, மீண்டும் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, அவரது பாஸ்போர்ட்டின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. இதைப்பார்த்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். ஏனெனில் பாஸ்போர்ட்டின் பக்கங்களைக் கிழிப்பது சட்டப்படி குற்றமாகும்.
காதலியைப் பார்க்க
இந்த விசாரணையின்போது, அவர் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி விட்டது. ஆனாலும், வெளி நாட்டில் காதலி இருக்கிறார். இந்த விவகாரம் என் மனைவிக்கு தெரியாது.சமீபத்தில் காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு செல்ல நேரிட்டது. வேலை விஷயமாக, இந்தியாவில் உள்ள ஒரு நகரத்துக்கு போவதாக கூறிவிட்டு வந்தேன்.
என் மனைவியின் குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்து விட்டது.
இதனால், நான் வெளிநாடு சென்றது, என் மனைவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்த, என் பயணம் தொடர்பான விபரங்கள் இடம்பெற்றிருந்த பக்கத்தை கிழித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதிரடியாகக் கைது
இந்திய தண்டனை சட்டப்படி, பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது குற்றம். இது தெரியாமல் அந்த இளைஞர் பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்துள்ளார். இதையடுத்து, மோசடி குற்றம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
மேலும் படிக்க...
தனியார் மருத்துவமனைகளிலும், பூஸ்டர் தடுப்பூசி இலவசம்தான்- அமைச்சர் பேட்டி!
பீர் ப்ரியர்களுக்கு நீரிழிவுநோய், இருதய நோய் வராது- ஆய்வில் கண்டுபிடிப்பு!