சர்வதேச விண்வெளி நிலையத்தை தற்போது சுற்றுலா தலமாக்க தீவிர நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 260 மைல்கள் (420 கிலோமீட்டர்), ஒரு மணி நேரத்திற்கு சுமார் 17,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. இந்த ஆய்வு மையம் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன. தினமும் இந்த மையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைவையும் காண்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station)
1998 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்காக பூமியைச் சுற்றி வருவதற்காக உருவாக்கப்பட்டது தான் சர்வதேச விண்வெளி நிலையம். இதுவரை, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து திரும்பியுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தை தற்போது சுற்றுலா தலமாக்க தீவிர நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதல் வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. பணக்காரர்கள் 3 பேர், சுமார் ரூ.1,250 கோடி செலவில் ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வணிக ரீதியாக பயணமாகச் சென்றுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்ரல்.8) அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. இதில், மூன்று பெரும் பணக்காரர்கள் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையில் வணிக ரீதியிலான பயணமாகச் சென்றுள்ளனர்.
விண்வெளி பயணம் (Space Travel)
இஸ்ரேலின் ஓகியோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர், தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி என 3 பணக்காரர்களும் தலா ரூ. 420 கோடி செலவில் 10 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தனர்.
10 நாள் பயணத்தில், இவர்கள் மூவரும் 8 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பணக்காரரும் செலவிடும் தொகை இந்திய ரூபாயில் சுமார் ரூ.420 கோடியை செலவழிக்கின்றனர். இதில் விண்வெளியில் உணவுக்கு மட்டும் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1.5 லட்சம் செலவாகிறது. நான்கு பேரும் ஆக்ஸியம்-1 ஊழியர்கள் என்று அழைக்கப்படுவார்கள். ஆக்ஸியம் ஒரு வணிக விண்வெளி பயண நிறுவனமாகும்.
3 பணக்காரர்களும் சேர்ந்து சுமார் ரூ.1,250 கோடி செலவில் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க