உலக நாடுகள் மாற்று எரிசக்தியை நோக்கி தங்கள் கொள்கைகளை மாற்றத் துவங்கிவிட்டனர். உதாரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பை ஊக்குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் நியூ ஹாலேண்ட் அக்ரீகல்சர் என்ற நிறுவனம் நியூ ஹாண்ட் டி6 என்ற மீத்தேனில் இயங்கும் டிராக்ரை தயாரித்துள்ளது.
மீத்தேன் கழிவுகள்
மீத்தேனை, விவசாயிகள் கழிவுகள் மற்றும் மாட்டு சாணம் மூலம் விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதற்காக மாட்டு சாணத்தைப் போட்டு வைக்க டிராக்டரில் 185 லிட்டர் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 75 பசுக்களின் சாணத்தைப் போட்டு வைக்க முடியும். இனி இன்ஜின் 180 எச்பி பவரை வெளிப்படுத்தும்.
மாட்டுச் சாணத்தில் இயங்கும் டிராக்டர்
டிராக்டர் இந்த சாணத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு மூலம் இயங்குகிறது. இந்த வாகனம் மாசுவாக 62 சதவீத நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் 15 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றை வெளியிடும் எனத் தெரியவந்துள்ளது. இந்த டிராக்டரை ரீஃபில் செய்ய 10 நிமிடங்கள் தான் ஆகும். இதனால் விவசாயிகள் இதற்கு பெட்ரோல்/டீசல் எனச் செலவு செய்ய வேண்டாம். செலவே இல்லாமல் இயங்கும் டிராக்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிஎன்எச் இன்ஸ்ட்ரீயல் நிறுவனமும், பென்னமேன் லிமிடெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமும் சேர்ந்து மீத்தேனில் இயங்கும்படியாக இந்த டிராக்ரை உருவாக்கியுள்ளது இதன் படி மீத்தேன் வாயுவைக் குறிப்பிட்ட அளவிற்குக் குளிர்வித்து அதைத் திரவ வடிவிற்கு மாற்றி அதை இன்ஜினில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான விவசாயம் செய்ய இயற்கையைக் கெடுக்காத எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
சிஎன்எச் நிறுவனம் சீஃப் எக்ஸிக்யூட்டிவ் அதிகாரியான ஸ்காட் ஒயின் என்பவர் ஒரு மிடியம் ஃபார்மில் இந்த டிராக்டருக்கு தேவையான அளவை விட அதிக அளவிலான மீத்தேனை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் தற்போது இந்த டிராக்டர்களை ஐரோப்பாவில் உள்ள பால் உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றைச் சேர்ந்து செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர் இந்தியாவிற்கு வந்தால் விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பால் மற்றும் நில விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் நிச்சயம் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க
வாழைப்பழத் தோலில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!