பரோட்டோ சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டாவால் பலி (Killed by Parota)
மீனவர் என்பதால் எத்தனையோ முள் வகையான மீன்களை சாப்பிட்டிருப்பார். அப்படிப்பட்ட மீனவரே, பரோட்டா சாப்பிட்டபோது, பரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் ஓச்சிரா அருகே உள்ள தெற்கு கிளப்பினா வரவில் வசித்து வந்தவர் ஹரிஷ். 45 வயதான இவருக்கு ஸ்ரீலதா என்ற மனைவியும், ஹரிதா என்ற மகளும், ஹரிஜித் என்ற மகனும் உள்ளனர்.
உறவினர் வீடு
மீனவரான ஹரீஸ் அண்மையில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அருகே இருக்கும் உணவகத்தில் இருந்து பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு இருக்கிறார். ஒரு பரோட்டாவை எடுத்துச் சாப்பிட தொடங்கியதுமே, அவருக்கு திடீரென மூச்சு அடைத்தது போல இருந்திருக்கிறது. சட்டென்று பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலிஸார் விசாரணை (Police investigation)
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பரோட்டா சாப்பிடும்போது மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார் என்று சொல்லவும், புரோட்டா தொண்டையில் சிக்கி அதன்மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.
பரோட்டா மரணங்கள்
இதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர், புரோட்டா சாப்பிட்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர் புரோட்டா தொண்டையில் சிக்கி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், மீனவர் ஒருவர் புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். புரோட்டாவில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு!
டிரெண்டிங் மோகம் - ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்ட நபர்!