ரயில் டிக்கெட் புக்கிங் செய்யாமலேயே நீங்கள் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.இதற்கென, தனி விதிமுறையே உள்ளது. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்தான்.
ரயில் பயணம்
வெளியூர் பயணம் என்று வந்துவிட்டாலே, இந்திய மக்களில் பெரும்பாலானோர், ரயில் பயணத்தையேப் பெரிதும் விரும்புகின்றனர்.
குறிப்பாக பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடிகிறது என்பதாலும் அதிக மக்களின் சாய்ஸ்ஸாக ரயில் பயணமே உள்ளது.
பயண விதிமுறைகள்
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக நீங்கள் IRCTC தொடர்பான விதிமுறைகளைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் திடீரென்று பயணம் செய்ய நேரிடும் போது இப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். சில நேரங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி உள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் உடனடியாக பயணம் செய்ய விரும்பினால், பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறிவிடலாம். அதன் பிறகு, நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டைப் பெறலாம். அப்படி ஒரு விதிமுறை உள்ளது.
ஆனால் இதைச் செய்ய நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக செக்கிங் அதிகாரியிடம் பேச வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை உங்களுக்கு ஒரு தனி டிக்கெட் தரப்படும்.சில நேரங்களில் ரயிலில் சீட் எதுவும் காலியாக இருக்காது. அப்போது, செக்கிங் அதிகாரி உங்களுக்கு சீட் கொடுக்க மறுக்கலாம். ஆனால், உங்களுடைய பயணத்தை நிறுத்த முடியாது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யவில்லை என்றால், நீங்கள் ரூ.250 அபராதத்துடன் சேர்த்து, பயணத்தின் மொத்தக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டைப் பெற வேண்டும்.
ரயில் பயணிகள் மகிழ்ச்சி
இந்திய ரயில்வேயில் இதுபோன்ற நிறைய விதிமுறைகள் உள்ளன. அவை பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கின்றன. சாமானிய மக்களின் நலனுக்காக இந்திய ரயில்வே இதுபோன்ற பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. எனவே நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ரயிலில் பயணிக்கலாம். இந்த வசதியை வேறு வழியில்லாத இக்கட்டான சூழலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அபராதம் மற்றும் செலவு அதிகம்.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!