திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ளகால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் நாளை (பிப்.14) ஆம் தேதி இலவச வெண்பன்றி வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணையாளர்கள், தொழில் முனைவோர், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு பயனடையலாம்.
லாபம் தரும் பண்ணைத் தொழிலில் வெண்பன்றி வளர்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. பெருகிவரும் தேவையும், சாதகமான சந்தை வாய்ப்பும் இன்று அதிக அளவிலான பண்ணியாளர்களை உருவாக்கி வருகிறது. வெண்பன்றி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், அவை குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இந்த ஒரு நாள் வகுப்பு உதவியாக இருக்கும்.
பயிற்சியின் சிறப்பம்சம்
பன்றி இனங்கள், பண்ணை/ குடில் அமைப்பு, இனப்பெருக்கம், சினைகால பராமரிப்பு, குட்டிகள் பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய் அறிகுறி மற்றும் தீர்க்கும் வழிகள், பன்றிகளை சந்தைப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.