தொழில்நுட்ப விஷயங்களில் அதிகளவு பரிட்சயம் இல்லாதோர், இனி குரல் வழியாகவே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
டோன்டேக்
'டோன்டேக்' (Dont Take) எனும் நிறுவனம் இத்தகைய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இந்நிறுவனம், கர்நாடகா மற்றும் பீஹார் மாநிலங்களில் 1,000 ரூபாய் வரையிலான பண பரிமாற்றத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. தற்போது, போன்கள் வாயிலாக பண பரிமாற்றம் செய்வதற்கு, மக்களுக்கு தொழில்நுட்ப பரிட்சயம் தேவைப்படுகிறது. இதனால் பலர், செயலி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த அஞ்சுகின்றனர்.
இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில், பியூச்சர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் குரல் வழியாகவே இனி பண பரிவர்த்தனை சேவையை வழங்கும் வசதியை டோன்டேக் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, வங்கிகள் உள்ளிட்டவை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்க முடியும்.
மேலும் படிக்க