ஜியா பாவல் மற்றும் ஜஹாத் தம்பதியினர் அவர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர்கள் குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி குழந்தை பெற்றுள்ள திருநங்கை தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் முதல் முறையாக பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும் குழந்தை பிறந்த சம்பவம் மாற்றுப்பாலினத்தவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.
மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.
கேரளாவில் கோழிக்கோட்டு பகுதியை சேர்ந்தவர்கள் மாற்றின பாலின தம்பதிகள் ஜியாபவல் (ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை) மற்றும் ஜஹாத் (பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி).
இவர்கள் இருவரும் மாற்று பாலினத்தவர் என்பதால் சிறு வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இத்தம்பதிகள் தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று கனவு கண்டனர். இதையடுத்து இவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஜாஹத் மாறியபோதும் அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியம் என மருத்துவர்கள் தெரிவித்து உரிய ஆலோசனை வழங்கினர்.
இந்நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நடனக்கலைஞரான ஜியாபவல் ஜஹாத் கர்ப்பமாக இருந்ததைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 8 காலை 9.30 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
இந்த தகவலை ஜியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளர்.
மேலும் ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இப்போது பொது வெளியில் கூற விரும்ப வில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜியா பவல் தனது இன்ஸ்டா கிராம் பதிவில் தனது குழந்தையின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குழந்தை பெற்றுள்ள மாற்றுப்பாலின தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்ற 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்தணு தானத்தின் மூலம் கருத்தரித்து பெண் குழந்தையை பெற்று எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்று பாலினத்தவர் பெற்றோர்களால் சிறு வயதிலே ஒதுக்கப்பட்டு பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்கின்றனர், தற்பொழுது மாற்றினத்தவரின் வாழ்க்கையை மேம்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் எடுத்து வருவது பெருமைக்குரிய ஒன்று.
மேலும் படிக்க
பென்சன், LIC, PF பணத்தை இதில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்!