பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வருகிறது, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள். தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கலன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டமான திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை, படுகை, வளப்பக்குடி, நேமம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பரவலாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தை திங்கள் முதல் நாளில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு சாகுபடி செய்துள்ளோம். தற்போது பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் மஞ்சள், கரும்பு மற்றும் இஞ்சி ஆகியவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சென்ற ஆண்டை போல இவ்வாண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.