நம்மில் பலரும் ஆங்கில மருந்துகளை தவிர்த்து நமது பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவத்தை நாடி வருகிறோம். பக்க விளைவுகள் இல்லாது அனைத்து வயதினருக்கும் ஏற்ற மருந்தாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது. இருப்பினும் அவற்றை பற்றிய போதிய புரிதல் இல்லை. கிராமங்களில் பரவலாகவும், நகரங்களில் குறைவாகவும் பயன்பாட்டில் சித்த மருத்துவம் இருந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மூலிகைகள் குறித்த இரண்டு நாள் வகுப்பு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் பகுதியில் நடை பெறவுள்ளது.
பயிற்சி விவரம்
- மூலிகைகளை அறிந்து கொள்ளுதல்
- மூலிகைத் தோட்டம் அமைத்தல்
- கைமருந்து செய்முறை
- மூலிகை மருந்து வியாபாரம் குறித்த பயிற்சி
பயிற்சி கட்டணம்: 200/-
தங்குமிடம் இலவசம், முன்பதிவு அவசியம்.
மேலும் விவரங்களுக்கு 98421 66097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.